(எம்.மனோசித்ரா)
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக ஜனாதிபதிக்கோ, பாராளுமன்றத்துக்கோ கூற முடியாது. கடன் சுமையிலுள்ள நாடுகள் பட்டியலை வெளியிடும் சர்வதேச நிறுவனங்களுக்கே அதனை அறிவிக்க முடியும். தேர்தலை அடிப்படையாகக் கொண்டு நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுவிட்டதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் திகதி ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவித்தலின் பின்னரே வட் வரியும் அதிகரிக்கப்பட்டது. எனவே இம்முறையும் அவ்வாறு ஏதேனும் இடம்பெறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறெனில் இவ்வாண்டில் மீண்டும் எதற்காக அந்த அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது?
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக ஜனாதிபதிக்கோ, பாராளுமன்றத்துக்கோ கூற முடியாது. கடன் சுமையிலுள்ள நாடுகள் பட்டியலை வெளியிடும் மோடிஸ், பிட்ச் ரேட்டிங் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கே அதனை அறிவிக்க முடியும். அடுத்த மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும்.
எனவே தற்போது அதனை அடிப்படையாகக் கொண்டு நாடகமொன்று அரங்கேற்றப்படவுள்ளது. தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சகல கருத்து கணிப்புக்களிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றார். எனவே இதுவரையிலும் தேர்தலில் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் குழுவினரை தம் பக்கம் ஈர்ப்பதற்காகவே ஜனாதிபதி இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM