குருவிக் கூட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிப்பு ; சந்தேக நபர் கைது

24 Jun, 2024 | 04:10 PM
image

குருவிக் கூடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 14 மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 46 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,வத்தளை ஹுணுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் உள்ள குருவிகள் இல்லாத குருவிக் கூடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குருவிக் கூடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 442 கிராம் 225 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41