(எம்.மனோசித்ரா)
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் நாட்டுக்காகவும், தமது அணிக்காகவும் பொறுப்புணர்வுடன் செயற்படும் அதே வேளை, ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். அதே வேளை அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் அனுமதிக்க முடியாது. அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதன் மூலமே முன்னோக்கிச் செல்ல முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
விளையாட்டில் தோல்வியடைந்தமைக்காக எமது கிரிக்கட் அணியினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் அதனை வெறும் விளையாட்டாக அன்றி, தொழிலாகவும் மதிக்க வேண்டும். அவர்களது செயற்திறன் மாத்திரம் சிறப்பாக இருந்தால் போதாது. ஒழுக்கமும் பேணப்பட வேண்டும். அதே வேளை எமது அணி வீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதையோ, பொது வெளிகளில் பேசுவதையோ அங்கீகரிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் அமெரிக்காவில் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதன் காரணமாகவே, அவர்களால் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவை உண்மை என்றால், அவற்றை ஆதாரங்களுடன் நிரூபித்தால் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் நான் பதவி விலகுவேன்.
கிரிக்கட் அணிக்கான வீரர்கள் தெரிவில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது. என்னால் தலையிடவும் முடியாது. அதற்கமைய எல்.பி.எல். தொடர் விவகாரத்திலும் என்னால் தலையிட முடியாது. அது சர்வதேச கிரிக்கட் சபையுடன் தொடர்புடையதாகும். எனவே இது குறித்த புரிதல் இன்றி கருத்துக்களை வெளியிடுவதையும் சிலர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் இலங்கையிலுள்ள 73 வகையான விளையாட்டுக்களுக்கும் பொறுந்தும். எனவே கிரிக்கட்டும் அதில் உள்ளடங்கும்.
விதிமுறைகளை தவிர்த்து இடைக்கால குழுக்களை நியமிப்பதால் விளையாட்டுக்களை மேம்படுத்த முடியாது. வெற்றியை ஏற்றுக் கொள்வதைப் போன்று தோல்வியையும் ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாளர்கள் உட்பட சகலரும் பழகிக் கொள்ள வேண்டும். எனவே எமது கிரிக்கட் அணியை கொச்சைப்படுத்துவதை விடுத்து, ஊக்கப்படுத்தினால் மாத்திரமே அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM