தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்

24 Jun, 2024 | 02:40 PM
image

''தமிழகத்தில் சாதி வாரியிலான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேசும் போது, ''வன்னியர்களுக்கான 10. 5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாளாக கிடப்பிலுள்ளது என்றும், சாதி வாரியிலான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்''  என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, '' வன்னியர்களுக்கான 10 . 5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தரவுகள் இல்லாததால் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதி வாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எளிதாக இருக்கும் '' என பதிலளித்தார்.

தொடர்ந்து இது குறித்து பாமக உறுப்பினர் ஜிகே மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு க ஸ்டாலின், '' சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் அதுவும் இந்த கூட்டத்தொடரிலேயேத் தீர்மானம் கொண்டுவரப்படும் '' என உறுதியளித்தார்.

இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய அளவு பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48