(எம்.நியூட்டன்)
நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன் கலந்து கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM