நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி 'இந்தியா' எம்பிக்கள் முழக்கம் :

24 Jun, 2024 | 12:11 PM
image

இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமர் நரேந்திரமோடி இன்று பதவியேற்றவேளை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி முழக்கமிட்டனர்.

18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். 

பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் அரசியல் சாசனப் புத்தகத்தை கைகளில் உயர்த்திக் காட்டி மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

 . இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 3-ந் தேதி வரை நடைபெறும். தற்காலிக சபாநாயகர்: லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக ஒடிஷா மாநில பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் நியமிக்கபட்டுள்ளார். இவர் 7 முறை லோக்சபா எம்பியாக தேர்வானவர். 

ஆனால் 8 முறை எம்பியான கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படவில்லை என்கிற சர்ச்சை நீடிக்கிறது.  

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு: லோக்சபா தொடங்குவதற்கு முன்னராக ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து லோக்சபா கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது.

 முதலில் பிரதமர் மோடி பதவியேற்ற்றார். மோடிக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடி பதவியேற்ற போது இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரும் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திக் காட்டி மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். முதல் நாளான இன்று மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் உள்ளிட்டோர் நாளை பதவியேற்பர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில்...

2024-07-22 22:45:00
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா...

2024-07-22 14:51:10
news-image

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி...

2024-07-22 14:54:21
news-image

அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு...

2024-07-22 12:12:16
news-image

கமலா ஹரிசிற்கு கறுப்பின பெண்கள் ஆதரவு

2024-07-22 11:51:46
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு காலை இழந்த...

2024-07-22 11:22:16
news-image

14 வயது சிறுவன் உயிரிழப்பு: நிபா...

2024-07-22 10:00:33
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக...

2024-07-22 06:51:47
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகினார்...

2024-07-21 23:43:24
news-image

மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களிற்கு காரணமான வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு...

2024-07-21 16:26:26
news-image

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் -...

2024-07-21 12:36:52
news-image

பங்களாதேஷில் வன்முறை; ஊரடங்கு; பல்கலைக்கழகங்களில் சிக்கிய...

2024-07-21 12:18:48