ரஸ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் யூதவழிபாட்டுதலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதமேந்திய நபர்கள் பொலிஸார் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்
டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் பெந்தகோஸ்மத பிரிவினரின் மதவழிபாட்டு நிகழ்வின்போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஏழு பொலிஸார் மதகுரு பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை எனினும் கடந்த காலங்களில் டாகெஸ்தான் பல தடவை இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் இரண்டு கிறிஸ்தவ தேவலாயங்களும் யூதவழிபாட்டுதலமும் இலக்குவைக்கப்பட்டதாகவும் கிறிஸ்தவமதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கறுப்புநிறத்தில் உடையணிந்தவர்கள் பொலிஸாரின் வாகத்தொடரணி மீது தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
டேர்பென்ட் என்ற பகுதியில் பலவருடங்களாக யூதர் வாழ்ந்து வரும் பகுதியில் உள்ள யூதவழிபாட்டுதலம் மீதும் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் பின்னர் அவற்றிற்கு தீ மூட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM