பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்து பிணையில் வெளிவந்த ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் சாஜன் 2021ம் ஆண்டு பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த போது அங்கு பொலிசாருக்கு சன்மானமாக வழங்கும் பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ள நிலையில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக பொலன்னறுவை விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இவரைக் கடந்த 18 ம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இவ்வாறு பிணையில் வெளிவந்தவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM