ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு செல்லும் முதலாவது அணிகள் எவை? இன்றும் நாளையும் தீர்மானம் மிக்க போட்டிகள்

Published By: Vishnu

23 Jun, 2024 | 06:52 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்தும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அரை இறுதிக்கு செல்லப்போகும் முதலாவது அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் குழு 2க்கான சுப்பர் 8 போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.

பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை வரவேற்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா எதிர்த்தாடவுள்ளது.

இதேவேளை இக் குழுவில் முதல் இரண்டு இடங்களில் உள்ள தென் ஆபிரிக்கா (4 புள்ளிகள்), முன்னாள் சம்பியனும் மற்றொரு வரவேற்பு நாடுமான மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மோதும் போட்டி அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் நாளைக் காலை நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் இக் குழுவிலிருந்து அரை இறுதித் தகுதயைப் பெறுவதற்கு 3 அணிகளுக்கு இடையில் போட்டி நிலவும்.

ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்கா முதாலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

ஐக்கிய  அமெரிக்கா வெற்றிபெற்று நாளைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் எவ்வித போட்டியும் இன்றி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

இன்றைய போட்டியில் இங்கிலாந்தும் நாளைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இன்றைய போட்டியில்  ஐக்கிய  அமெரிக்காவும் நாளைய போட்டியில் தென் ஆபிரிக்காவும் வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்காவும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் இரண்டாம் இடத்தைப் பெறும் அணியும் அரை இறுதிக்கு முன்னேறும்.

எனவே இந்த இரண்டு போட்டிகளும் நான்கு அணிகளுக்கும் தீரமானம் மிக்கவையாக அமையவுள்ளன.

இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

இன்று இரவு நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டியுடன் ஐக்கிய அமெரிக்காவுக்கு மறக்க முடியாக ரி20 உலகக் கிண்ணம் முடிவுக்கு வரலாம் என்ற பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.

ஆனால், ஐக்கிய அமெரிக்கா அரை இறுதிக்குள் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் ஐக்கிய அமெரிக்காவுக்கு சாதகமாக இப் போட்டி அமையும் என எதிர்பார்க்கமுடியாது.

எவ்வாறாயினும் பாகிஸ்தானுக்கு எதிரான சுப்பர் ஓவர் வெற்றி, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுடனான போட்டிகளில் சவாலாக விளையாடிய நினைவுகளுடன் ஐக்கிய அமெரிக்கா பெருந் திருப்தியுடன் விடைபெறுவது உறுதி.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவுடனான தனது கடைசி சுப்பர் 8 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப் பெரிய நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றி பெற இங்கிலாந்து முயற்சிக்கும். அப்படியே வெற்றிபெற்றாலும் அதன் தலைவிதி நாளைய தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டி முடிவிலேயே தீர்மானிக்கப்படும்.

கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களுடன் இ ங்கிலாந்தும் ஐக்கிய அமெரிக்காவும் இன்றைய போட்டியிலும் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தும் ஐக்கிய அமெரிக்காவும் சர்வதேச ரி20 அரங்கில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

அணிகள்

இங்கிலாந்து: பில் சோல்ட், ஜொஸ் பட்லர் (அணித் தலைவர்), ஜொனி பெயாஸ்டோவ், மொயீன் அலி, ஹெரி ப்றூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், க்றிஸ் ஜோர்டன் அல்லது மார்க் வூட், ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ராஷித், ரீஸ் டொப்லே.

ஐக்கிய அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், அண்ட்றீஸ் கௌஸ், நிட்டிஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ், கோரி அண்டசன், ஷயான் ஜஹங்கிர், ஹாமீத் சிங், நொஸ்துஷ் கெஞ்சிங்கே, ஷட்லி வென் ஷோக்வைக், அலி கான், சௌராவ் நேத்ரவோல்கர்.

தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் நாளைக் காலை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் போட்டி முடிவை அறிந்த அணிகளாக இப் போட்டியை இந்த இரண்டு அணிகளும் எதிர்கொள்வதால் அதற்கேற்ற வியுகங்களுடன் விளையாடும் என்பது நிச்சயம்.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இப் போட்டி கடைசிவரை இரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் தென் ஆபிரிக்காவுக்கு இன்றைய போட்டியில் வெற்றிகிட்டுமா அல்லது துரதிர்ஷ்டம் அதனை மீண்டும் தொற்றிக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தென் ஆபிரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் 22 தடவைகள் சர்வதேச ரி20 போட்டிகளில் சந்தித்துள்ளன. அவற்றில் இரண்டு அணிகளும் 11 வெற்றிகளை ஈட்டி சம அளவில் இருக்கின்றன.

ரி20 உலகக் கிண்ணத்தில் 3 - 1 ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.

அணிகள்

தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், மார்க்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி அல்லது ஒட்நீல் பார்ட்மன், அன்றிச் நோக்யா.

மேற்கிந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப், ஜோன்சன் சார்ள்ஸ், நிக்கலஸ் பூரன், ரோவ்மன் பவல் (தலைவர்), அண்ட்றே ரசல், ஷேர்ஃபேன் ரதஃபர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட் அல்லது ரொஸ்டன் சேஸ், ஒபெட் மெக்கோய், அக்கீல் ஹொசெயன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48