வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின் உரிமத்தை மாற்ற முயற்சி செய்த சாரதி கைது - யாழில் சம்பவம்

23 Jun, 2024 | 07:13 PM
image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரை, மோசடி செய்யும் நோக்கில் உரிம மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றினை கொள்வனவு செய்து, அதற்கு சாரதி ஒருவரையும் நியமித்திருந்தார்.

தற்போது அந்தப் பெண் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில், வாகனத்துக்கு இந்த ஆண்டுக்கான வரி அனுமதி பத்திரம், புகை பரிசோதனை செய்வதற்கு வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என கூறி வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணிடம் சாரதி அவற்றை பெற்றுள்ளார். 

வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு, காரை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சாரதி முயற்சித்துள்ளார். இந்த விடயம் வாகன உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து, அவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

நீதிமன்ற விசாரணைகளில் சந்தேக நபர் தன் மீதான குற்றச்சட்டை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட வாகனம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் உரிமையாளரான பெண்ணிடம் மீள ஒப்படைக்க உத்தரவிட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12