'இளைஞர்களின் எழுச்சி' தொனிப்பொருளில் கண்டியில் இளைஞர் மாநாடு

23 Jun, 2024 | 07:16 PM
image

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாம் 200 வேலைத்திட்டத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள 'இளைஞர்களின் எழுச்சி' எனும் தொனிப்பொருளில் இளைஞர் மாநாடானது கண்டியில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன் குறித்த இளைஞர் மாநாடு இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

நாம் எப்பொழுதுமே பெரிதும் எதிர்பார்ப்பது அரச வேலை வாய்ப்புகளை மாத்திரமே. ஆனால் அது தவறல்ல தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயத்தொழில் முயற்சியான்மை போன்றவற்றில் ஈடுபடுவது எதிர்காலத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதனை நாம் உனர வேண்டும்.

குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பெருந்தோட்ட துறையினரை பொருத்தவரையில் 30 சதவீதமான மாணவர்களுக்கு மாத்திரமே தரமான கல்வி கிடைக்கின்றது. அதேபோல் குறைந்த அளவிலான தொழில் வேலைவாய்ப்புகளே காணப்படும் இந்த சமயத்தில் நாம் அதனை எவ்வாறு பயன்படுத்திய வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதனை எதிர்கால இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

மேலும் இந்த மாநாட்டை நடாத்துவதற்கான பிரதான காரணம் எமது சமுதாயத்தின் மத்தியில் ஒரு விடயத்தை வெற்றிக்கொள்ள அதாவது தேர்வு செய்து கொள்வதற்கு பிறரை நாட வேண்டிய சூழ்நிலையே  காலகட்டத்தில் காணப்படுகிறது.  

ஆனால் அது ஒன்றும் தவறல்ல நம்மைப் பொறுத்தவரையில் அரச வேலைவாய்ப்பு தவித்து சமூக முயற்சி, சமுதாய முயற்சி மற்றும் சுயத்தொழில் முயற்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு பயணிப்போமானால் எமது எதிர்காலமானது சுபீட்சமாக அமையும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

முதலில் நம்மை நாம் மதித்து பழக வேண்டும் பின்னர் நாம் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கி அனைத்து வகையான வெற்றிகளையும் பெறக்கூடியதாக காணப்படும். ஆகவே என்றும் எப்போதும் நான் உங்களுடைய பிரதிநிதி, உங்களுக்காகவே நான் சேவை செய்ய தயாராக இருக்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் நான் உங்களை கைவிட மாட்டேன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-13 14:02:01
news-image

ஜனாஸாக்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த...

2024-07-13 12:23:04
news-image

சகோதரியின் வீட்டில் தேங்காய் உரித்துக்கொண்டிருந்த சகோதரன்...

2024-07-13 12:20:30
news-image

கதிர்காம உற்சவத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு!

2024-07-13 12:18:24
news-image

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்...

2024-07-13 12:28:55