ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக 15ஆயிரம் வழக்குகள் !

23 Jun, 2024 | 07:17 PM
image

நமது நிருபர்

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக்கணக்குகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத தேக்க நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை, நிறுவனங்கள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற காரணிகள் வழக்குகள் தேக்கமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளன. 

இதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊழியர் சேம இலாப நிதிக் கட்டமைப்புக்களுக்கு குறித்த நிதியைச் செலுத்துவதற்கு தவறிய உரிமையாளர்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுக்கணக்குகளுக்கான குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு தள்ளுபடி...

2024-07-15 15:06:15
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு- சட்டமா...

2024-07-15 14:55:14
news-image

கெப் வண்டி விபத்து ; ஒருவர்...

2024-07-15 15:32:18
news-image

மொரட்டுவையில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2024-07-15 14:45:17
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-07-15 14:46:49
news-image

ருமேனியா,போலந்துக்கு செல்லவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்

2024-07-15 14:43:30
news-image

பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலில் நால்வர்...

2024-07-15 14:53:49