யாழ்ப்பாணம், நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊர் இளைஞர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் நான்கு சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ள நிலையில், ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூவர் தலைமறைவாகியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள மூவரும் நெடுந்தீவு பிரதேசத்தை விட்டு தப்பி செல்லாதவாறு , கடற்படையினர் , ஊரவர்கள் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை தலைமறைவாகியுள்ள மூன்று சந்தேகநபர்களையும் கைதுசெய்யக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் ஊரவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை ((22 )சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்குடன் , நெடுந்தீவு பொலிஸார் நெடுந்தீவில் சந்தேகத்திற்குரிய இடங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது ,ஊரவர்களும் பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM