வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றில், தந்தை சிறுகுற்றச் செயலில் சிக்கி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில், தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், தாயார் கூலி வேலைக்கு செல்லும்போது தனது பிள்ளைகளை அயல்வீட்டில் விட்டுச் செல்வது வழமை.
இவ்வாறு அயல்வீட்டில் விட்டுச் சென்ற நிலையிலேயே, 3 வயது சிறுமி பாலியல் தொல்லையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் தாயார் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதான நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM