(எம்.மனோசித்ரா)
முதுகெலும்பின் 'S' வடிவத்துக்கு வழிவகுக்கும் ஒரு நிலையான 'ஸ்கோலியோசிஸ்' எனப்படும் நோய் நிலைமை பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) விசேட பேரணியொன்று இடம்பெற்றது.
தேசிய ஸ்கோலியோசிஸ் விழிப்புணர்வு தினம் ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இந்த நடைபேரணி இடம்பெற்றது.
கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான பேரணியானது லிப்டன் சுற்றுவட்டத்தை கடந்து சுதந்திர மாவத்தையில் உள்ள சத்திர சிகிச்சை கல்லூரி வரை சென்றது.
இந்த பேரணி இலங்கை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது. அணிவகுப்பைத் தொடங்குவதற்கு முன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளின் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.
ஸ்கோலியோசிஸ் என்பது முதுகெலும்பு 'S' வடிவத்தில் சிதைந்துவிடும் ஒரு நிலையாகும். இந்த குறைபாட்டின் தீவிரம் வயது மற்றும் குழந்தை வளரும்போது அதிகரிக்கலாம். இவற்றில், மிக அதிகளவு வளைவு கொண்ட சிதைவுகள் மார்புக் குழியின் சுருக்கம் மற்றும் இதயம் மற்றும் நுரையீரலின் செயற்பாட்டை பாதிக்கலாம். இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் திறன்களைக் குறைக்கிறது. இந்த நிலை உடல் பலவீனம் மட்டுமல்ல, மனதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பேரணியில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, சீமாட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹெக்டர் வீரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் விஜேசூரிய, இலங்கை எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், இலங்கை எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விசேட நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM