யாழ். இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பண மோசடி : லண்டன் பிரஜை கைது

23 Jun, 2024 | 03:24 PM
image

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார். 

எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா...

2024-07-15 16:54:18
news-image

இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த போலி...

2024-07-15 16:58:01
news-image

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின்...

2024-07-15 16:54:46
news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும்...

2024-07-15 17:01:04
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு தள்ளுபடி...

2024-07-15 15:06:15
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு- சட்டமா...

2024-07-15 14:55:14