பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எட்டு ஆண்டுகளில் 3.416 பில்லியன் ரூபா இழப்பீடு : கோப் குழு!

23 Jun, 2024 | 02:06 PM
image

நமது நிருபர்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 2014 முதல் 2022 வரையான காலத்தில் 3.416 பில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்களுக்கான குழுவில் (கோப் குழு) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குள் நிலவும் நேர்மையின்மையினாலும் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் திணைக்களத்தினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உரிய சுற்றறிக்கையை வழங்குவதில் எட்டு வருடங்கள் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தியதாலும் கூட்டுத்தாபனத்துக்கு மேற்படி நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்களுக்கான குழுவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிலை குறித்தும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு ஆராய்ந்தது. இதன்போதே மேற்படி விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

அத்துடன் மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் தவறான செயல்களுக்கு பொறுப்புக்கூறச் செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை ஏழு வேலை நாட்களுக்குள் தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு பணித்துள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு கூடுதலான தரகுப்பணத்தை செலுத்தியமையால் 31 பில்லியன் ரூபாய் மேலதிக செலவீனம் ஏற்பட்டதோடு இதனை நிவர்த்தி செய்வதற்காக பொதுமக்கள் எரிபொருளுக்காக 1000 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அதிகமாகக் கொடுக்கப்பட்ட தரகுப் பணமானது விற்பனைச் செலவாகக் கணக்கிடப்பட்டதோடு அது வரவுத் தொகையாக உள்ளிடப்பட்டிருக்கவில்லை என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி  இந்த மேலதிக கொடுப்பனவுகளை மீளப்பெறுவதற்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழு மேலும் கேட்டறிந்தது. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் தற்போது நாட்டில் இல்லை எனவும் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

அத்தோடு நிதி மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர்ப் பட்டியலைக் கொண்ட விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உள்ளக விசாரணைகளுக்கு இணையாக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் புகார் செய்யுமாறும் பொது நிறுவனங்களுக்கான குழு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல்...

2024-07-13 18:33:43
news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 18:33:40
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39