பொல்பித்திகம களுகல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில் கோடா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்யச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தடியால் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.
பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று சார்ஜன்ட் குழுவினர் போதைப்பொருள் தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, களுகல்ல பகுதியில் அமைந்துள்ள காணியில் கோடா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள் வந்துரஸ்ஸ பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 35, 62 மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
இதேவேளை சந்தேக நபரைக் கைது செய்ய சென்ற போது அவர் கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருப்பதும் தெரியவந்ததுள்ளதுடன் குறித்த நபரைக் கைதுசெய்யதபோது அங்கிருந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் எதிர்ப்பை வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM