பங்களாதேஷை வீழ்த்தி உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது இந்தியா

23 Jun, 2024 | 05:39 AM
image

(நெவில் அன்தனி)

அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த குழு 1க்கான சுப்பர் 8 போட்டியில் பங்களாதேஷை 50 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் இந்தியா ரி20 உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை  சற்று  அதிகரித்துக்கொண்டது.

அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நாளைக் காலை நடைபெறவுள்ள போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றால் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் முதல் அணிகளாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் குழு 2இல் எஞ்சியுள்ள போட்டி முடிவுகளே அரை இறுதிக்கான 2 அணிகளைத் தீர்மானிக்கும்.

ஹார்திக் பாண்டியா குவித்த அரைச் சதம், குல்தீப் யாதவ்வின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அத்துடன் விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், ஷிவம் டுபே ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் விராத் கோஹ்லியும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 16 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்திருந்தபோது ரோஹித் ஷர்மா 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து விராத் கோஹ்லியும் ரிஷாப் பான்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 71 ஓட்டங்களாக உயர்த்தினர்.

அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார். நடப்பு உலகக் கிண்ணத்தில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

கடைசி இரண்டு போட்டிகளில் அரைச் சதங்கள் குவித்த சூரியகுமார் யாதவ் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

தொடர்ந்து 4ஆவது விக்கெட்டில் ரிஷாப் பான்டுடன் 31 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் ஷிவம் டுபேயுடன் 53 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் அக்ஸார் பட்டேலுடன் 35 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா பகிர்ந்து இந்திய அணியை பலமான நிலையில் இட்டார்.

ரிஷாப் பான்ட் 36 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 3 சிக்ஸ்களுடன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹார்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றார். அக்ஸார் பட்டேல் 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

லிட்டன் தாஸ் (13), தன்ஸித் ஹசன் ஆகிய இருவரும் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்த தன்ஸித் ஹசன் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து தௌஹித் ரிதோய் (4), ஷக்கிப் அல் ஹசன் (11), ஆகிய இருவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். சொற்ப நேரத்தில் ஜாக்கர் அலி (1) நடையைக் கட்டினார்.

மஹ்முதுல்லா, ரிஷாத் ஹொசெய்ன் ஆகிய இருவரும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு பலம் சேர்க்க முயற்சித்தனர்.

ஆனால், 10 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 24 ஓட்டங்களைப் பெற்ற ரிஷாத் ஹொசெய்ன் ஆட்டம் இழந்ததும் பங்களாதேஷ் தோல்வி அடைவது உறதியாயிற்று.

மஹ்முதுல்லா 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: ஹார்திக் பாண்டியா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18 வயதின் கீழ் தெற்காசிய கூடைப்பந்தாட்டம்...

2024-07-14 09:59:27
news-image

18இன் கீழ் ஆசிய கிண்ண தகுதிகாண்...

2024-07-13 16:31:51
news-image

கென்ய மரதன் ஓட்ட வீரரான லோரன்ஸ்...

2024-07-13 13:03:12
news-image

37 வருட கால உலக சாதனையை...

2024-07-13 12:08:33
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் இன்று...

2024-07-13 10:49:25
news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29