ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச் சுற்றுக்குள் முதல் அணிகளாக இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தகுதிபெறுமா?

22 Jun, 2024 | 07:31 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றிலிருந்து அரை இறுதிகளுக்கு முதல் அணிகளாக இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தகுதிபெறுமா என்பதைத் தீர்மானிக்கும் குழு 1க்கான இரண்டு சுப்பர் 8 போட்டிகள் இன்று (22) இரவும் நாளைக் காலையும் நடைபெறவுள்ளன.

சுப்பர் 8 சுற்றில் தத்தமது முதலாவது போட்டிகளில் வெற்றியீட்டிய முன்னாள் சம்பியன்களான இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டிகளில் முறையே பங்களாதேஷையும் ஆப்கானிஸ்தானையும் எதிர்த்தாடவுள்ளன.

இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அவை இரண்டும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

ஒருவேளை இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி வெற்றிபெற்று மற்றைய அணி தோல்வி அடைந்தால் அல்லது போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டால் கடைசி சுப்பர் 8 போட்டிகளே குழு 1இலிருந்து அரை இறுதிக்கு செல்லும் அணிகளைத் தீர்மானிக்கும்.

இந்தியா எதிர் பங்களாதேஷ்

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சுப்பர் 8 போட்டி அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளில் இந்தியா வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாகக் காணப்படுகிறது.

இந்தியாவும் பங்களாதேஷும் நேருக்கு நேர் மோதிய 13 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட நான்கு சந்தர்ப்பங்களிலும் வெற்றிபெற்ற இந்தியா, தனது வெற்றி அலையைத் தொடரும் என நம்பப்படுகிறது.

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா.

பங்களாதேஷ்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), தொளஹித் ஹிர்தோய், ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மஹெதி ஹசன், ரிஷாத் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத், தன்ஸிம் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான்.

அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்

அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான சுப்பர் 8 போட்டி சென். வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நாளைக் காலை நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளில் சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த அவுஸ்திரேலியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த வெற்றி இலகுவாக அமையும் என கூறமுடியாது.

அவுஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரே ஒரு தடவைதான் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலாகும்.

அப் போட்டியில் ரஷித் கான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் அவுஸ்திரேலியா 4 ஓட்டங்களால் மிகவும் இறுக்கமான வெற்றியைப் பெற்றது.

அப் போட்டியில் இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் நாளைய போட்டியிலும் விளையாட விருப்பதால் 2 வருடங்களுக்கு முன்னர் போன்றே  நாளைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்கக்கப்படுகிறது.

அணிகள்

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மாஷ் (தலைவர்), க்லென் மெக்ஸ்வெல், மாக்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டாக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் அல்லது ஏஷ்டன் அகார், அடம் ஸம்ப்பா.

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸரத்துல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான்,  குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், நஜிபுல்லா ஸ்த்ரான், மொஹமத் நபி, ரஷித் கான் (தலைவர்), நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை ரி20 அணியின் புதிய தலைவர்...

2024-07-14 13:47:08
news-image

3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000...

2024-07-14 13:27:15
news-image

18 வயதின் கீழ் தெற்காசிய கூடைப்பந்தாட்டம்...

2024-07-14 09:59:27
news-image

18இன் கீழ் ஆசிய கிண்ண தகுதிகாண்...

2024-07-13 16:31:51
news-image

கென்ய மரதன் ஓட்ட வீரரான லோரன்ஸ்...

2024-07-13 13:03:12
news-image

37 வருட கால உலக சாதனையை...

2024-07-13 12:08:33
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் இன்று...

2024-07-13 10:49:25
news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25