லாந்தர் - விமர்சனம்

22 Jun, 2024 | 07:02 PM
image

தயாரிப்பு : எம் சினிமா புரொடக்ஷன்

நடிகர்கள் : விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் மற்றும் பலர்.

இயக்கம் : ஷாஜி சலீம்

மதிப்பீடு : 2/5

ல்ல கதைகளை மட்டுமே தெரிவு செய்து நடிக்கும் நடிகர் விதார்த்.. தன் நண்பரும், அறிமுக இயக்குநருமான ஷாஜி சலீமின் எதிர்கால நன்மை கருதி கதையைக் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட 'லாந்தர்' எனும் திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கோவை மாநகரத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றுபவர் அரவிந்த் (விதார்த்)- இவரது மனைவி ஜானு (ஸ்வேதா டோரத்தி). இந்த தம்பதிகளில் ஜானுவிற்கு தனிமை , இருள் ஆகியவற்றைக் கண்டால் பயம். அத்துடன் மயங்கியும் விடுவார். இதனால் கணவர் அரவிந்தை எப்போதும் உடனிருக்குமாறு ஜானு கேட்டுக் கொள்கிறார். ஆனால் கணவர் அரவிந்த் காவல்துறை உயர் அதிகாரி என்பதால் ஜானு தனிமையில் இருக்க வேண்டியதாக இருக்கிறது.

நகுல் (விபின்)  - மஞ்சு (சஹானா) என்றொரு மற்றொரு தம்பதியினரும் அதே மாநகரில் வசிக்கிறார்கள். இவர்களில் மஞ்சு எனும் கதாபாத்திரத்திற்கு பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டர் எனும் ஒரு அரிய நோய்.  இதன் காரணமாக மஞ்சுவிற்கு அதீத அதிர்ச்சி ஏற்பட்டால்...  தன்னிலை மறந்து மூர்க்கத்தனமாக செயல்படுவார்.‌

ஒரு நாள் இரவில் கோவை மாநகரில் ஒரு மர்ம உருவம் எதிரில் தென்படுபவர்களை முரட்டுத்தனமாக தாக்கி உயிர் இழக்க செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கிறது. இது தொடர்பாக விசாரணை செய்ய காவலர் ஒருவர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து செல்ல.. அந்த மர்ம உருவம் ஒருவரை தாக்கி விட்டு சர்வ சாதாரணமாக கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியில்.. காவல்துறையின் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் அங்கு வரவழைக்கிறார். அந்த மர்ம உருவம் காவல்துறையினரையும் தாக்கிவிட்டு கடந்து செல்கிறது. தற்போது இந்த விடயம் காவல்துறையின் உயரதிகாரியான அரவிந்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர் களத்தில் இறங்கி, மர்ம நபர் யார் என்பதை கண்டறிகிறாரா? இல்லையா? என்பதும், இந்த குற்றத்தின் பின்னணி என்ன? என்பதையும் புலன் விசாரணை செய்து கண்டறிவது தான் படத்தின் கதை.‌

படம் தொடங்கியதிலிருந்து முதல் பாதி வரை காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.‌ இதற்கு ஒளிப்பதிவாளர் ஞான சௌந்தரும், பின்னணி இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீனும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் கொலைகாரன் யார்?  என்பது நாம் யூகிப்பது போலவே இருப்பதால்... திரையில் காட்சிகள் தோன்றினாலும் .. மனமும், கையும் பையில் இருக்கும்  செல்போன் மீது செல்கிறது.

விதார்த் காவல்துறை உயரதிகாரி வேடத்தில் கம்பீரமாக இல்லாமல்.. இயல்பாக இருப்பது உறுத்துகிறது. அதிலும் அவர் மேலாடை இன்றி சிகிச்சை பெறும் காட்சியில்... காவல்துறை உயரதிகாரி தானா..! என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. 

விதார்தின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி தன்னிடமுள்ள முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆனாலும் அவரை ரசிக்க ரசிகர்களின் மனம் மறுக்கிறது. ஏனெனில் ஏதோ ஒன்று  மிஸ்ஸிங்.

மற்றொரு புதுமுக நடிகையான சஹானாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார். இருந்தாலும் முகத்தில் இளமையும், குறும்பும் இருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களுக்கு இவரை பிடிக்கும்.

படம் முழுவதும் ரசிகர்களுக்கு கேள்விகள் மனதில் எழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கான பதிலை இயக்குநர் முழுமையாக விவரிக்காமல் ஒன்று, இரண்டிற்கு மட்டும் மேம்போக்காக விளக்கம் அளிப்பதால்.. திரில்லர் வகையிலான திரைக்கதை தள்ளாடுகிறது.  இருந்தாலும் லாந்தருக்கு குறைந்தபட்ச வெளிச்சம் ( வெற்றி) கிடைக்கும்.

லாந்தர் - திடுக்கிட செய்யாத மாந்தர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46