நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் தயாராகி வரும் 'கோட்- GOAT' திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை படக் குழுவினர் வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட் - GOAT' திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் - கல்பாத்தி எஸ். கணேஷ் - கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல் விஜயின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படக் குழுவினர் விஜய் இரட்டை வேடத்தில் தோன்றும் எக்சன் காட்சிகளையும், சேசிங் காட்சிகளையும் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM