தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் யோகி பாபு - டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாக உயர்ந்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் தள ரசிகர்களின் ஃபேவரைட்டான இணையத் தொடரிலும் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
'மொழி' திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவிலான தமிழர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் ராதா மோகன். இவரது இயக்கத்தில் உருவாகும் 'சட்னி- சாம்பார்' எனும் இணைய தொடரில் யோகி பாபு, வாணி போஜன், 'கயல்' சந்திர மௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, 'மைனா' நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், இயக்குநரும், நடிகருமான ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜேஷ் அசோக் இசையமைத்திருக்கிறார். இந்த இணையத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
இந்த இணைய தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த இணையத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பசியாறும் மேஜை பலகை முன் கதையின் நாயகனான யோகி பாபு அப்பாவியாக தோற்றமளிக்க... அவரைச் சுற்றி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நட்சத்திர நடிகர்கள் நகைச்சுவையுடன் தோன்றுவது.. வித்தியாசமாக இருப்பதால், ரசிகர்களிடையே இந்த இணையத் தொடரை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரைத்துறையில் நட்சத்திரங்கள் அசலாகவே உணவினை தயாரித்து உடன் பணிபுரிபவர்களுக்கு பசியாற்றுவதில் வல்லவர்கள் என்பதனை சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் காணொலி மூலம் கண்டு ரசித்திருக்கிறோம். அந்த வகையில் ரசிகர்களுக்கு..யோகி பாபு பரிமாறும் 'சட்னி- சாம்பார்' சுவையாக தான் இருக்கும். ஏனெனில் ராதா மோகன் என்ற சமையல் கலைஞரின் கைப் பக்குவத்திலும், ரசிகர்களுக்கு பிடித்த சுவை சேர்க்கும் பிரபல நட்சத்திரங்களும் இதில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM