தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த நடிகைகள் பேயாக வந்து மிரட்டுவது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஹன்சிகா மோத்வானி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா.. ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நடிகை சோனியா அகர்வால் பேயாக மிரட்ட தொடங்கி இருக்கிறார். இவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் '7 G' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர் வரும் ஜுலை மாதம் ஐந்தாம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'வெப்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் '7 G' எனும் திரைப்படத்தில் சோனியா அகர்வால் , ஸ்மிருதி வெங்கட், சினேகா குப்தா, சித்தார்த் விபின், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஹாரூன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் ஒரு பேய் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் பொருத்தமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருப்பதால்... படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM