சிவனொளிபாத மலையைப் பாதுகாக்க சியபத பினான்ஸின் ஒரு கூட்டு முயற்சி

22 Jun, 2024 | 05:12 PM
image

இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற யாத்திரைத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சிவனொளிபாத மலை, சிவபெருமான் அல்லது புத்தர் அல்லது ஆதாமின் புனிதத் தடம் இருப்பதாக நம்பப்படும் புராதன, புனிதத் தலமாகும். 

ஒவ்வோர் ஆண்டும், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தருகின்றனர்.

அதன் சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்றுப் பின்னணி காரணமாகவும், வனவிலங்குகள் மற்றும் இயற்கையின் எழில் காரணமாகவும் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவனொளிபாத மலை பல நூற்றாண்டுகளாக பல்லுயிர் மையமாக உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாரம்பரிய பிரதேசத்தில் ஏராளமான நீர்நிலைகள் உருவாகின்றன. 

மேலும், தற்போது அழிந்துபோகும் அபாயம் உள்ளவையாக கருதப்படும் ஏராளமான விலங்கு மற்றும் தாவர இனங்கள் என்பனவும் அங்கு காணப்படுகின்றன.

தற்போது மில்லியன்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகள், யாத்திரை காலங்களில் வனப்பாதை வழியாகப் பயணிக்கின்றனர். இது அங்கிருக்கும் வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

தொன் கணக்கில் கொட்டப்படும் மக்காத பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் யாத்திரை தலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

குப்பை கொட்டுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டாலும், வீசப்படும் கழிவுகளை அகற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல முயற்சிகள் எடுத்தாலும் அல்லது சமூக ஊடகங்களில் இது தொடர்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், இது ஒரு வளர்ந்து வரும் பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக வழிபாட்டாளர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பாரம்பரியமான அனுஸ்டானங்களை மேற்கொள்ளும் 'சீதா கங்குல' மற்றும் 'இந்திகட்டுபான' போன்ற பகுதிகளில் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் லஞ்ச் சீட்கள் என்பவற்றை எறிவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5, 2024க்கு முன்னதாக அதற்குத் தீர்வுகளை தேடும் முயற்சியில், முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, 'சியபதயிலிருந்து பூமிக்கு' என்ற திட்டத்தின் மூலம் 'நெமதுமென் பசு அமதும' (வழிபாட்டின் பின் தூய்மைப்படுத்தல்) என்ற கருப்பொருளின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி அதன் கூட்டுறவு சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சியாக சூழலையும் வனவிலங்கு சரணாலயத்தையும், வரும் தலைமுறைகளுக்காக பாதுகாப்பதற்கான அதன் முயற்சியின் முதல் படியைத் தொடங்கியுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவிடம் விசேட அனுமதியைப் பெற்று, சியபத தலைமையகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) நுவரெலியா அலுவலகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த பணியை ஆரம்பித்தனர். 

சிவனொளிபாத மலையை சுத்தப்படுத்தும் 'சியபதயிலிருந்து பூமிக்கு' என்ற திட்டத்தின் நோக்கத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், சியபத ஊழியர்கள் ஒரு டன் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் பிற கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

நுவரெலியா மாவட்டச் செயலாளர் திரு.நந்தன கலபொட 'நெமதுமென் பசு அமதும' நிகழ்ச்சித் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், 

"ஒவ்வொரு யாத்திரை காலத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் டன் கணக்கிலான கழிவுப் பொருட்களைச் சேகரிப்பது கடினமான பணியாகும். வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே சிவனொளிபாத மலையைப் பாதுகாப்பதற்கான வழி, குப்பை கொட்டுவதைத் தவிர்ப்பது என்பதை யாத்திரிகர்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். 

சியபத பினான்ஸின் முயற்சியானது வெறும் துப்புரவுத் திட்டம் என்பதற்கும் அப்பாற்பட்டது. நீண்ட காலத்துக்கு இந்த புனிதத் தலத்தை பாதுகாக்க மக்களை ஊக்குவிக்கும் சியபதவின் ஒரு திடமான, நிலையான நடவடிக்கையாகும் என்று கூறினார்.

இந்த முக்கியமான முன்நோக்கு குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்ட சியபத பினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன 'சிவனொளிபாத மலை புனிதத் தலத்தைப் பாதுகாப்பது என்பது எமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, இலங்கையின் உயர்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாப்பதாகும். 

எனவே, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகளால் எதிர்நோக்கப்படும் பெரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அதன் பாதுகாப்பை பொறுப்பேற்க வேண்டியதும், கவனத்துடன் இருப்பதும் நம் அனைவரின் கடமையாகும், அதற்கு நாம் கூட்டாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய தருணம் இது. இந்தத் திட்டத்தின் வெற்றியால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்வரும் தலைமுறைகளுக்கு சிவனொளிபாத மலையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

சியபத பினான்ஸ் பிஎல்சி, இப்போது அதன் CSR நாட்காட்டியில் வருடாந்த நிகழ்வாக, "நெமதுமென் பசு அமதும" திட்டத்தை ஒரு தேசிய அளவிலான திட்டமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஒரே நோக்கத்தின் கீழ் ஒன்று திரட்டுகிறது. முறையான கழிவு முகாமைத்துவத்தின் மூலம் சிவனொளிபாத மலையையும் அதன் விலைமதிப்பற்ற சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது குறித்து யாத்திரிகர்கள், உல்லாசப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்காக, வழக்கமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்கு இந்த திட்டம் மேலும் எதிர்பார்த்துள்ளது.

சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 வருடங்களாக, இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற பலருக்கு வலுவூட்டி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு கட்டமைக்கப்பட்ட விலையிடும்...

2024-07-22 20:28:40
news-image

இலங்கை மருத்துவ கல்லூரி கவுன்சிலின் அங்கீகாரம்...

2024-07-20 17:04:59
news-image

அடுத்த Zesta விளம்பரத்துக்காக இலங்கை தேயிலை...

2024-07-22 15:12:24
news-image

100PLUS ஐசோடோனிக் பானம் இலங்கையில் அறிமுகம்

2024-07-18 01:32:47
news-image

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐ.சி.சி.யுடன்...

2024-07-17 12:55:38
news-image

பிளவர் குயின் முழு  ஆடைப்பால்மா இலங்கை...

2024-07-17 14:18:07
news-image

புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக...

2024-07-10 15:06:40
news-image

யூனியன் அசூரன்ஸ் அனுசரணையில் நயோமி இராஜரட்ணம்...

2024-07-05 14:42:25
news-image

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப்...

2024-07-05 13:59:16
news-image

தேசிய வியாபாரத் தரச்சிறப்புவிருதுகள் நிகழ்வில் மிக...

2024-07-02 13:34:01
news-image

Favourite International மற்றும் Austrade Sri...

2024-06-29 18:46:27
news-image

மோட்டார் வாகன உற்பத்தி /பொருத்துவது மற்றும்...

2024-06-29 16:41:15