விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம் : இங்கிலாந்துக்கு தனி சட்டம்? பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்!

22 Jun, 2024 | 04:33 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவில் நடைபெற்று வருகின்ற 9ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சில போட்டிகளில் மழை காரணமாக போட்டிகள் கைவிடப்பட்டிருந்தது. இந்த போட்டிகள் கைவிடப்பட்டதன் சுப்பர் 8 சுற்று வாய்ப்பில் சில அணிகளுக்கு சாதகமாகவும், சில அணிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருந்தன. ஐ.சி.சி.யின் இந்த தீர்மானங்களால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 'பீ'க்கான லீக் சுற்றில் தீர்மானம் மிக்க போட்டியாக இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்தது. இங்கிலாந்து அணி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமாயின், இப்போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்நிலையில், இப்போட்டி மழை காரணமாக மிக நீண்ட நேரம் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக, 'ஏ' குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதவிருந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் 90 நிமிடங்கள் மாத்திரம் காத்திருந்து போட்டி கைவிடப்பட்டதாக ஐ.சி.சி. அறிவித்தது. இதனால் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் பாகிஸ்தானின் வாய்ப்பு அற்றுப்போனதுடன், ஐக்கிய அமெரிக்கா முன்னேறியது. 

இருப்பினும், இங்கிலாந்து, நமீபியா அணிகள் மோதிய போட்டியில் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மழை குறுக்கிட்டிருந்தபோதிலும் போட்டி கைவிடப்பட்டதாக ஐ.சி.சி. அறிவிக்கவில்லை. ஐ.சி.சி விதிமுறைகளை மீறி செயற்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நடப்புச் சம்பியனான இங்கிலாந்தை எப்படியாயினும், சுப்பர் 8 சுற்றுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஐ.சி.சி. இவ்வாறு செயற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் ஐ.சி.சி. மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடைசியில் இப்போட்டி அணிக்கு 10 ஓவர்களாக ‍குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு, இங்கிலாந்து வெற்றியும் பெற்றது. இதனால் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் ஸ்கொட்லாந்து அணியின் வாய்ப்பும் பறிக்கப்பட்டது. அத்துடன், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால், சில அணிகளின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து  -  நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐ.சி.சி. காட்டிய பொறுமையை ஏன் அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டிக்கும் காத்திருக்காமல், அவசர அவசரமாக போட்டி கைவிடப்பட்டிருந்தது ஏன்? எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39
news-image

24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில்...

2025-01-13 04:59:17
news-image

மென்செஸ்டர் SA ஏற்பாட்டில் அழைப்பு கால்பந்தாட்ட...

2025-01-12 22:09:08
news-image

பெத்தும், குசல், ஜனித் ஆகியோர் அரைச்...

2025-01-11 17:55:14