திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ஈச்ச நகரில் காட்டு யானைகள் தங்களது பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) )அதிகாலை இடம் பெற்றுள்ளது.
இதில் பயன் தரும் வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பல மரங்களை யானைகள் துவம்சம் செய்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக் காட்டு யானைகள் தொடர்ந்தும் தங்களது ஊருக்குள் இரவு வேலைகளில் வருவதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதம் விளைவித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுமார் 15 க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை முற்றாக நாசமாக்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இச் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்களையும் தங்கள் உடைமைகளையும் இக் காட்டு யானைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM