கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

22 Jun, 2024 | 04:16 PM
image

(நெவில் அன்தனி)

தேசிய ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் கண்டி திகன விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஒலிம்பிக் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கிலிருந்து திகன விளையாட்டுத் தொகுதி மைதானம் வரை நடைபெற்ற ஒலிம்பிக் தின ஊர்வலத்தை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, ஒலிம்பிக் கொடியை அசைத்து ஆரம்பித்துவைத்தார்.

இந்த ஊர்வலத்திலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு வைபவங்களிலும் மத்திய மாகாணத்திலுள்ள பத்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மற்றும் மாகாண விளையாட்டு வீரர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பாரிஸ் நகரில் உள்ள சோர்போனில் நவீன ஒலிம்பிக் இயக்கம் 1894ஆம் ஆண்டு ஜூன் மாதம் உதயமானதை நினைவுகூரும் வகையில் 1948ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.

ஒலிம்பிக் தினமானது உலகெங்கிலும் உள்ள இளைஞர், யுவதிகள் விளையாட்டுத்துறையில் பங்கேற்பதை ஊக்குவிப்பதுடன், சிறப்பு, நட்பு மற்றும் மரியாதை ஆகிய ஒலிம்பிக் மதிப்புகளை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் தினம் வழமையாக ஜூன் 23ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றபோதிலும் இலங்கையில் இவ் விழா கடந்த 19ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இது பொசன் பண்டிகை காலம் என்பதாலேயே இலங்கையில் முன்கூட்டியே ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது.

ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு வரைதல் மற்றும் கைப்பணி போட்டி பெற்றோர் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கு இடையிலான உரையாடல், மாணவர்களுக்கான உடற்தகுதி மற்றும் தடைதாண்டி ஓட்டம், மரம் நடுகை திட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன.

பிரெஞ்சு தூதரகத்தின் கலாசார செயலாளர் ஒலிவியா பெல்மோர், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே, தேசிய ஒலிம்பிக்  குழு  பிரதிநிதிகள் ஆகியோரும் ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த வைபவத்தில் பேசிய தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, 'இந்த வருடம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா விழாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்களே இலங்கை சார்பாக பங்குற்றுகின்றனர். ஆனால், லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து விளையாட்டு வீரர்களை கூடுதலாக அனுப்பி வைக்கவும் பதக்கங்களை வென்றெடுக்கவும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18 வயதின் கீழ் தெற்காசிய கூடைப்பந்தாட்டம்...

2024-07-14 09:59:27
news-image

18இன் கீழ் ஆசிய கிண்ண தகுதிகாண்...

2024-07-13 16:31:51
news-image

கென்ய மரதன் ஓட்ட வீரரான லோரன்ஸ்...

2024-07-13 13:03:12
news-image

37 வருட கால உலக சாதனையை...

2024-07-13 12:08:33
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் இன்று...

2024-07-13 10:49:25
news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29