அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும் ஒன்றிணைந்து சேறுபூசி வருகின்றன - சஜித் பிரேமதாச

22 Jun, 2024 | 04:47 PM
image

இன்றைய நிலவரப்படி, நாட்டின் அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத சில கட்சிகளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பகிர்ந்து வருவது சரியில்லை என்றும், அவர்களைப் பொறுத்தவரை வளங்கள் இல்லாத இடத்துக்கு வளங்களை வழங்குவது தவறு என்றும் கருதுகின்றனர். மதுபான உரிமப் பத்திரம் கொடுத்தே இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாக தெரிவித்து, விகாரைகளுக்கு முன்பாகவும் மதுபானசாலைகளை திறந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இது போன்ற கேவலமான டீல்களை செய்து கொண்டு பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கணினிகளை விநியோகிப்பது அவர்களின் பார்வையில் தவறாக தோன்றி, பியர் அனுமதிப் பத்திரம் வழங்குவது தவறில்லாத ஒன்றாக தோன்றுகிறது. அவர்கள் தமது அனைத்து அரசியல் கொள்கைகளையும் பணத்திற்கு காட்டிக்கொடுத்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 249 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், யாபஹுவ, வலஸ்வெவ குணபால மலலசேகர மாதிரி  பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,  

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. 

டொலர்களுக்கும், வரப்பிரசாதங்களுக்கும், சலுகைகளுக்கும் அவர்கள் அவர்களது கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

 நாடு வங்குரோத்தடைந்து, மக்கள் வாழ்வு சீரழிந்துள்ள வேளையில், மக்கள் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஒன்று சேர்ந்து, மக்களுக்கு நலன் பயக்கும் பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து வருகின்றனர்.

இந்த சேறுபூசும் கீழ்த்தர தாக்குதல்களுக்கு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

இலவசக் கல்வியை பாதுகாப்போம் என்று கூறுபவர்களின் முட்டாள்தனமான கொள்கைகளால் இலவசக் கல்வி அழிந்து வருவதனால், இலவசக் கல்வியில் ஆங்கில மொழிக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். 

இவ்வாறு மாறத்தை ஏற்படுத்தாமல் கல்வியை மேம்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இன்று நாடு முழுவதும் பட்டதாரிகள் வேலை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் துறையில் கூட வேலை கிடைப்பதில்லை. கலைப் பட்டம் அந்நிறுவனங்களுக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து யாரும் பேசுவதில்லை. சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என்று கூறி தத்தமது வாக்கு வாங்கிகளை அதிகரித்துக் கொள்ளவே அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். 

காலத்துக் காலம் அரசியல்வாதிகள் ஆட்சிபீடம் ஏறினாலும் 41 இலட்சம் மாணவ தலைமுறைக்கு ஏற்பட்ட மாற்றம் ஏதுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

பாடசாலை கட்டமைப்புக்குத் தேவையான வளங்களை வழங்க முடியாத ஆட்சியின் மூலம் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. 

இலவசக் கல்வியைப் பாதுகாப்பதாகக் கூறி பாத யாத்திரை செல்லும் தரப்பினர் இலவசக் கல்வி மேம்படுவதை ஒருபோதும் விரும்புவதில்லை. 

புரட்சியாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் பிள்ளைகள் தனியார் பாடசாலைக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்குமே செல்கிறார்கள். அவர்களுக்கு தனியார் கல்வி நல்லதாக இருந்தாலும் இலவசக் கல்வி நல்லதொன்றாக அமையவில்லை. 

 இலவசக் கல்வியை மேம்படுத்த முயலும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளும் தமது பிள்ளைகளின் நிலைக்கு வருவார்கள் என்ற பொறாமைத்தன சிந்தனையுடனயே இவர்கள் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12