Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள் பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தில் புதிய நிறுவனங்கள்

Published By: Digital Desk 3

22 Jun, 2024 | 01:44 PM
image

எழுதியவர் - சஞ்ச டி சில்வா ஜயதிலக

மே 10, 2024 இன் இரண்டாம் பாகமான பொருளாதார உருமாற்றம் குறித்த அண்மைய வர்த்தமானியானது, இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முன்னெப்போதுமில்லாத அதிகாரம் மற்றும் புதிய அதிகார வழிமுறை கொண்ட பல புத்தம் புதிய "ஒருங்கிணைக்கப்பட்ட" நிறுவனங்கள் மற்றும் அதிசக்தி வாய்ந்த சர்வதேச தூதுவர் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.

குறிப்பிடத்தக்க வகையில், தலைமைப்பதவி உட்பட அவை அனைத்தும் பெரும்பாலான உறுப்பினர்களை பணியமர்த்துவதற்கும் நீக்குவதற்குமான அதிகாரம் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகத் தெரிகிறது. 

அவை இந்தப் பொறுப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ள, இப்போது புதிய நிறுவனங்களுக்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ள நிறுவனங்களின் மீது அதிகாரம் கொண்டவை அல்லது அவற்றை பிரதியிடுகின்றன. 

அவை தங்களுடைய சொந்த நிதியத்தை வைத்திருக்கவும், ஊழியர்களை நியமிக்கவும், சில வெளிநாடுகளில் கிளைகளை நிறுவவும், பிற நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களை வைத்திருக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைப்புகள் மற்றும் பிற அரசாங்கத் திணைக்களங்களின் மீது அவற்றிற்கு அதிகாரம் இருக்க வேண்டியதுடன், அவற்றிடமிருந்து தகவல்களைக் கோருவதற்கும் பெறுவதற்கும் அவை சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, புதிய நிறுவனங்களில் இரண்டு தங்கள் பணியாளர்கள் தகவல்களை வெளியிடுவதைத் தடுக்கின்ற ரகசியக் கூறுகளை கொண்டுள்ளன.

இந்த முழுப் புதிய கட்டமைப்பும் முதலீட்டு தீர்மானங்களை விரைவாகக் கண்காணிக்கும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த ஏற்பாடு ஆளும் உயரடுக்கின் ஊழல் மற்றும் வெளிப்படையான மோசடிகளுக்கு இப்போது நன்கு அறியப்பட்ட ஒரு நாட்டில், நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கான அதிகாரங்களின் வலுவேறாக்கம் மற்றும் பிற சோதனை முறைமைகள் போன்ற தேவையான கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இணங்குகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனவே இந்த புதிய கட்டமைப்பை சட்டமாக எழுதுவதற்கு முன் அவ்வாறு சோதிப்பதற்கு தகுதியுள்ளவர்கள் ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவையாகும்.

பரபரப்பாக விவாதிக்கப்பட்டது

இந்த சட்டமூலத்திற்கு மிகவும் நெருக்கமான ஆய்வு தேவைப்படுகிறது, ஏனெனில் இது எங்களது சட்டங்களின் குழுவில் சேர்க்கப்பட வேண்டும், எனவே பொதுவாக கொள்கை நடவடிக்கைகளுக்கு வழங்கப்படாத பாரிய முக்கியத்துவத்தை எடுத்துக்கொள்கிறது.

முதலாவதாக, சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட பொருளாதார முகாமைத்துவத்தின் கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்தின் இந்த மாற்றங்கள், தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தை முடிப்பதற்கு அல்லது அதற்குப் பதிலாக அவரது முன்னவரின் பதவிக்காலம் முடிவதற்குள் உந்தப்பட்டவை என்பது அவதானிக்கப்பட்டது.

பாராளுமன்றமானது அவநம்பிக்கை மற்றும் விரோதப் போக்கைக் காட்டிலும், மக்களிடமிருந்து ஆணையைப் பெற்று, அவர்களின் ஆதரவுடன் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த, சில மாதங்களில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரை, இந்த சட்டமூலத்தைத் தாமதப்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் மீது ஜனாதிபதி பயன்படுத்திய அதிகாரங்கள் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான அவசரம் மீது எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. IMF உடனான தற்போதைய அமைச்சரவையின் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளான நிபந்தனைகளை நாட்டின் சட்டத்தில் சேர்க்கும் முயற்சியாக இந்த சட்டமூலம் முழுவதுமாக தெரிகிறது என்று அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது ஓர் சரியான கரிசனமாகும், ஏனென்றால் வேறு நிர்வாகம் வேறுபட்ட, மிகவும் சாதகமான ஒப்பந்தத்தைப் பெற முடிந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க முடியும். எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை சட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், இந்த இடைக்கால ஜனாதிபதியால் நாட்டிற்கு எவ்வளவு பாதுகாப்பளிக்க முடியுமோ அந்தளவுக்கு புதிய நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுடன்,  மக்கள் வழங்கிய ஆணை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தனது சொந்த அமைச்சரவையுடன் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நினைக்கும் மாற்றங்களுக்கு சிறியளவான இடத்தையே அளிக்கும்.

இந்த வரைவுச் சட்டத்தை நிபுணர்கள் கலந்துரையாடிய சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஒரு சட்டத்தரணி, இந்த சட்டமூலத்தின் விரிவான தன்மை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய வேண்டிய பல்வேறு பொருளாதார சதவீதங்களை உள்ளடக்கியதுடன், சட்டத்தில் இணைக்கப்பட்டால், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை அவ்வப்போது தேர்தல் மூலம் முடிவு செய்வதன் மூலம் மக்களின் இறையாண்மை உரிமையை கட்டுப்படுத்துகிறது என்று வாதிட்டார். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை இவ்வாறு செய்வது புத்திசாலித்தனமா என்பது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அவர்களின் அடிப்படை உரிமை குறித்த வினாவிற்கு பொருத்தமற்றதாகும். வேறுபட்ட பொருளாதார திட்டம் அல்லது சித்தாந்தம் கொண்ட நிர்வாகம், அதன் முன்மொழிவுகளின் செயற்திறனை நம்பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் தேர்ந்தெடுத்ததை செயற்படுத்த முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இதன் அடிப்படையில், பாராளுமன்றத்தில் நுழைவதற்குக் கூட மக்களிடம் ஆணையைப் பெறாத, இடைக்கால ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட தற்போதைய சட்டமூலத்தை அவசர அவசரமாக சட்டமாக்கக் கூடாது. இத்தகைய ஆழமான மாற்றங்களின் தாக்கம் அதிகரித்து வரும் வறுமையை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை பாதிக்கும் போது, பொருளாதார நெருக்கடி தோல்விக்கான ஓர் காரணமாக இருக்க முடியாது.

புதிய நிறுவனங்களைப் பொறுத்தவரை, சபைகளுக்கு விகிதாசார எண்ணிக்கையில் உறுப்பினர்களையும் தலைவர்களையும் நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள் குடிமக்களுக்கு ஒருவித கவலையை ஏற்படுத்துகின்றன.

கடந்த முறை தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது ஒரு நிறுவனத்தின் தலைவரான, மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க அதிகாரமளிக்கப்பட்ட நேரத்தில், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், ஜனாதிபதியின் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பாரிய மோசடியில் ஈடுபட்டார் என்பது பிணைப்பத்திர மோசடி என பிரபல்யமானதுடன், தற்போது சர்வதேச பிடியாணை மற்றும் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்த்து வருகிறார்.

எனவே, போதுமான சோதனைகளை வைத்திருப்பதும் பொருளாதார நெருக்கடியின் இன்றியமையாத தேவையாகத் தோன்றினாலும், யாருடைய கையிலும் அதிகாரம் அதிகமாகக் குவிவதைத் தடுப்பதற்கான சமநிலைகளை கொண்டிருப்பதும் அவசியமாகும். இந்த நெருக்கடியானது கணிசமான அளவில் அரசியல்வாதிகளின் ஊழலின் விளைவாகவும், அவர்களால் ஏற்படுத்தப்பட்டதாகவும் இருந்தது, எனவே போதுமான கட்டுப்பாடுகளுடன் முறையான அமைப்புகள் இருக்க வேண்டும் என்று கோருகிறது.

நிறுவனங்கள்

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்ட புதிய நிறுவனங்கள் மீதான ஜனாதிபதியின் செல்வாக்கு பின்வருமாறு:

1. இலங்கையின் பொருளாதார ஆணைக்குழு (EC), பின்வருவோரை கொண்ட நிறுவனமாக விவரிக்கப்படுகிறது:

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்கள், இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட 2 புதிய நிறுவனங்களின் தலைவர்கள் (இவர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள்).

ஜனாதிபதி பொருளாதார ஆணைக்குழுவின் தலைவரை நியமிப்பார்.

2. ஸ்ரீலங்காவில் முதலிடல், பின்வருவோரை கொண்ட நிறுவனமாக விவரிக்கப்படுகிறது:

EC ஆல் நியமிக்கப்பட்ட 3 முதல் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

EC ஆல் நியமிக்கப்பட்ட தலைவர்.

3. இலங்கை முதலீட்டு வலயங்கள், பின்வருவோரை கொண்ட நிறுவனமாக விவரிக்கப்படுகிறது:

பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட 4 நபர்களை உள்ளடக்கியதாக 7 நபர்களை கொண்ட குழு (அமைச்சு குறிப்பிடப்படவில்லை, எனவே அமைச்சர் ஜனாதிபதியாக இருக்கலாம்). 

பொறுப்புள்ள அமைச்சர் தலைவரை நியமிப்பார்.

4. சர்வதேச வர்த்தக அலுவலகம் (OIT), பின்வருவோரை கொண்ட நிறுவனமாக விவரிக்கப்படுகிறது:

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் CEO, சர்வதேச வர்த்தகத்திற்கான தூதுவராகவும் இருப்பார்.

அரசியலமைப்பு சபையின் இணக்கத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஏனைய 5 உறுப்பினர்கள்.

இரகசியப் பிரிவின் கீழான பணியாளர்கள். 

5. சர்வதேச வர்த்தகத்திற்கான தூதுவர்:

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவராவார்.

இலங்கையின் சர்வதேச வர்த்தக உறவுகளை வழிநடாத்தும் நோக்கத்திற்காக இருதரப்பு மற்றும் பலதரப்பு ஆகிய இருவகை சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான பிரதான பேச்சுவார்த்தையாளராக இருக்க வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பு (WTO), ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாடு (UNCTAD), சர்வதேச வர்த்தக விவகாரங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள், பொதுநலவாயம் மற்றும் பிற சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எந்தவொரு நாடு அல்லது நாட்டு குழுக்கள் தொடர்பான சர்வதேச வர்த்தக விடயங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

மகத்தான அதிகாரத்துடனான இந்த வகிபாகம், இந்தியாவில் தூதுவர் மிலிந்த மொரகொட வகித்த வகிபங்கை பிரதிபலிப்பதாகவும் விரிவுபடுத்துவதாகவும் தெரிகிறது, அங்கு அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து (இலங்கையில் முதன்முறையாக) வழங்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் இலங்கையின் பொருளாதாரத்தில் விரிவான வகிபங்கு உட்பட இந்தியாவுடனான வர்த்தக உறவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார். இந்த மாதிரியானது இலங்கை சார்பாக இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் நியமிக்கப்பட்ட தூதுவர் தலைமை தாங்கும் ஒரு தனி நிறுவனமாக உலக அரங்கை உள்ளடக்கும் வகையில் அதிவேகமாக நெகிழ்ச்சியடைந்ததாக தெரிகிறது.

6. தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு, பின்வருவோரை கொண்ட நிறுவனமாக விவரிக்கப்படுகிறது:

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்கள்.

ஜனாதிபதி தலைவரை நியமிப்பார்.

இரகசியப் பிரிவின் கீழான பணியாளர்கள்.

7. இலங்கை பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான நிறுவனம், பின்வருவோரை கொண்ட நிறுவனமாக விவரிக்கப்படுகிறது:

அமைச்சர் தலைவரை நியமிப்பார். (ஜனாதிபதி இந்த அமைச்சராக இருப்பதைத் தடுப்பதற்கு எதுவித ஏற்பாடும் இல்லை).

குழுவின் உறுப்பினர்களில் சர்வதேச வர்த்தகத்திற்கான தூதுவர் (ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்) உள்ளடங்குவர்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் சிந்தனைக் குழுக்களில் இருந்து பயிற்றுனர்கள் குழுவை நியமிக்கலாம்.

இலங்கையில் பொருளாதார வலயங்களை வரையறுத்தல், அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், இருதரப்பு மற்றும் பன்னாட்டுப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட எதிர்கால முதலீட்டுத் தீர்மானங்களின் முழு கட்டமைப்பு தற்போது இந்தப் புதிய கட்டமைப்பிற்குள் அடங்கியுள்ளது. இந்த ஏற்பாடு விசேட பொருளாதார வலயங்களை மட்டும் அல்லாமல் முழுத் தீவையும் உள்ளடக்கியதால், அதற்குள் அதிகப்படியான அதிகாரத்தைக் குவிப்பது போல் தெரிகின்றது.

இந்த வகையான கட்டமைப்பு பங்களாதேஷ் போன்ற பிற நாடுகளில் மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்று வாதிடப்பட்டது. எவ்வாறாயினும், பூகோள அரசியல் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தாக்கங்களுடன் இந்த அரசாங்கத்தால் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் சில வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பாரிய சர்ச்சைக்குரிய தன்மையைக் கருத்தில் கொண்டு, மக்களின் கரிசனங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, தேவையான மாற்றங்களை வடிவமைக்கவும், திட்டமிட்டு செயற்படுத்தவும் மிகவும் பொருத்தமானவர் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சஞ்ச டி சில்வா ஜயதிலகா “Mission Impossible – Geneva” (விஜித யாப்பா, கொழும்பு, 2017) எனும் நூலை எழுதியவராவார்.

Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53