சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்; சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் அமெரிக்காவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்    

22 Jun, 2024 | 11:11 AM
image

 (நெவில் அன்தனி) 

ஐக்கிய அமெரிக்காவுக்கு (USA) எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்ரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப்  போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் (WI) 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.    

இங்கிலாந்துக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள், நிகர ஓட்ட வேகத்தை அதிகரிப்பதைக் குறியாகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி  அதனை நிறைவேற்றுக்கொண்டது.

ரொஸ்டன் சேஸ், அண்ட்றே ரசல் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகளும் ஷாய் ஹோப்பின் அதிரடி துடுப்பாட்டமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்தப் போட்டியில் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் நிலையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறி அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது.

ஐக்கிய அமொரிக்காவை 128 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள், 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றியீட்டியது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப் 39 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 82 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆரம்ப விக்கெட்டில் ஜோன்சன் சார்ள்ஸுடன் 42 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாய் ஹோப், பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 23 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் 15 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆறு பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

அண்ட்றீஸ் கௌஸ் (29), நிட்டிஷ் குமார் (20) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 51 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், அதன் பின்னர் 9 விக்கெட்கள் 78 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

கௌஸ், குமார் ஆகியோரை விட மிலிந்த் குமார் (19), ஷெட்லி வன் ஷோக்வைக் (18), அலி கான் (14 ஆ.இ.), அணித் தலைவர் ஆரோன் ஜோன்ஸ் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அண்ட்றே ரசல் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்:  ரொஸ்டன் சேஸ்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக் ஜலசந்தியை ஒற்றை காலுடன் நீந்திக்...

2025-04-19 17:38:51
news-image

ஆசிய றக்பி தரமுயர்வு போட்டியில் இலங்கை...

2025-04-19 14:05:33
news-image

18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர்...

2025-04-19 13:18:35
news-image

18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர்...

2025-04-19 01:03:53
news-image

பங்களாதேஷுக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள்...

2025-04-18 22:26:02
news-image

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற...

2025-04-18 01:22:12
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-18 01:18:14
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தனது சொந்த மண்ணில்...

2025-04-18 01:14:18
news-image

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2025-04-17 03:42:47
news-image

இலங்கைக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம்: பெண்களுக்கான...

2025-04-17 03:40:20
news-image

சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸை டெல்ஹி...

2025-04-17 03:38:02
news-image

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் சர்ச்சை;...

2025-04-16 23:21:01