ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் அது உதவும் அதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் இல்லை என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.
இந்த பொறிமுறையால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவுமில்லை உள்நாட்டு பொறிமுறை குறித்த அர்ப்பணிப்பை இது முன்கூட்டியே தீர்மானம் செய்கின்றது,உறுப்புநாடுகளின் வளங்களை வீணடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்றவிதத்தில்,தேர்ந்தெடுக்கப்படாத தன்மையுடன், புறநிலையுடன் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்து மதிப்பிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோட்பாடுகளிற்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது மேலும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கியநாடுகள் மனித உரி;மை பேரவைக்கு உறுப்புநாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM