மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை மகளிர் அணிக்கு வரலாற்று வெற்றி !

22 Jun, 2024 | 10:19 AM
image

 (ஆர்.சேது­ராமன்)

மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணி­யு­ட­னான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்­டியில் இலங்கை அணி 160 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது .  

இதன்­மூலம், 3 போட்­டிகள் கொண்ட இத்­தொ­டரின் வெற்­றி­யையும் 3--0 விகி­தத்தில் இலங்கை அணி வென்­றுள்­ளது. ஹம்­பாந்­தோட்­டையில் நேற்று நடை­பெற்ற இப்­போட்­டியில், முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்­களில் 6 விக்கெட் இழப்­புக்கு 275 ஓட்­டங்­கைளக் குவித்­தது. அணித்­த­லைவி சமரி அத்­த­பத்து 106 பந்­து­களில் 2 சிக்­ஸர்கள், 10 பவுண்­ட­றிகள் உட்­பட 91 ஓட்­டங்­களைக் குவித்தார்.

நிலக் ஷிகா சில்வா 78 பந்­து­களில் 63 ஓட்­டங்­க­ளையும் அனுஷ்கா சஞ்­சீ­வனி 46 பந்­து­களில்  55 ஓட்­டங்­க­ளையும் விஷ்மி குண­ரட்ண 60 பந்­து­களில் 44 ஓட்­டங்­க­ளையும் குவித்­தனர்.   

மேற்­கிந்­திய பந்­து­வீச்­சா­ளர்­களில் கரிஷ்மா ராம்­ஹராக் 46 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை வீழ்த்­ தினார். பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணி, இலங்கை வீராங்­க­னை­களின் பந்­து­வீச்சை எதிர்­கொள்ளத் திண­றி­யது. 34.5 ஓவர்­களில் 115 ஓட்­டங்­க­ளுடன் அவ் ­வ­ணியின் சகல விக்­கெட்­களும் வீழ்ந்­தன.

செடீன் நேஷன் 57 பந்­து­களில் 46 ஓட்­டங்­க­ளையும்  ஆலியா அலீன் 27 பந்­து­களில் 27 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். மேற்­கிந்­திய அணியில் வேறு எவரும் 20 இற்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற­வில்லை.

இலங்கை பந்­து­வீச்­சா­ளர்­களில் சச்­சினி நிசன்­சலா ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களை வீழ்த்­தினார்.  ஒருநாள் சர்­வ­தேச போட்­டியில் நிசன்­சலா 5 விக்­கெட்­களை கைப்­பற்­றி­யமை இதுவே முதல் தடவை. 22 வய­தான நிசன்­ச­லாவின் 3 ஆவது ஒருநாள் சர்­வ­தேச போட்டி இது.

ஓஷதி ரண­சிங்க 14  ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை கைப்­பற்­றினார்.  உதே­ஷிகா பிர­போ­தினி 6 ஓவர்கள் பந்­து­வீசி 6 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்­கெட்டை வீழ்த்­தினார். சுமரி அத்­த­பத்து 11 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்­கெட்­டையும்  காவ்யா காவிந்தி 28 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்­கெட்­டையும் வீழ்த்­தினார்.

இத்­தொ­டரின் முதல் போட்­டியில் 6 விக்­கெட்­க­ளாலும், இரண்­டா­வது போட்­டியில் 5 விக்­கெட்­க­ளாலும் இலங்கை வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது.

 கடந்த 16 வரு­டங்­களில் மேற்­கிந்­திய மகளிர் அணி­யு­ட­னான இரு தரப்பு ஒருநாள் சர்­வ­தேச தொடரில் இலங்கை மகளிர் அணி வென்­றமை இதுவே முதல் தட­வை­யாகும்.

அதே­வேளை, மேற்­கிந்­திய மகளிர் அணிக்கு எதி­ரான ஒருநாள் சர்­வ­தேச தொடரில் சகல போட்­டி­க­ளிலும் இலங்கை அணி வெற்­றி­யீட்டி வெள்­ளை­ய­டித்­தமை இது இரண்­டா­வது தட­வை­யாகும்.

மிகப் பெரிய வெற்றி

3 ஆவது போட்­டியில் 160 ஓட்­டங்­களால் வென்­றமை, ஒருநாள் சர்­வ­தேச போட்­டி­களில் இலங்கை மகளிர் அணி ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் பெற்ற மிகப் பெரிய வெற்­றி­யாகும்.

2002  ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணியை 155 ஓட்­டங்­களால் வென்­ற­மையே இது­வரை  இலங்கை மகளிர் அணியின் மிகப் பெரிய வெற்­றி­யாக இருந்­தது.

3 ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரராக சச்சினி நிசன்சலாவும் இத்தொடரின் சிறப்பாட் டக்காரராக விஷ்மி குணரத்னவும் தெரிவாகினர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது20 தொடர் ஜூன் 24, 26, 28 ஆம் திகதிகளில் ஹம்பாந் தோட்டையில் நடைபெறவுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18