மன்னாரில் கோழிகள், காகங்கள், நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு : வேதனையில் மக்கள் !

22 Jun, 2024 | 10:42 AM
image

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் நாய்கள் மற்றும் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர் . 

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், 

மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.  

குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது. 

இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் விஷம் கலந்த உணவை எவராவது வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. 

இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவுலவில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

2024-09-18 16:55:20
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத்...

2024-09-18 17:04:53
news-image

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை -...

2024-09-18 17:01:48
news-image

மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை...

2024-09-18 16:30:03
news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11
news-image

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை எமது...

2024-09-18 16:11:58
news-image

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம்...

2024-09-18 17:05:23
news-image

வாக்களிப்பது எப்படி ?

2024-09-18 16:22:03
news-image

மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

2024-09-18 16:05:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எக்கானமி வகுப்பில் உணவை...

2024-09-18 16:47:43