அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது.
காயமடைந்த 10 பேரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
தெற்கு ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஃபோர்டைஸ் நகரத்தில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்ததாகவும் ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் என்ற அமைப்பு,
2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுவரை 234 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 21 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM