வெப்ப அலையில் தத்தளிக்கும் நான்கு பால்கன் நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அல்பேனியா, போஸ்னியா, மொண்டினீக்ரோ மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் பிற்பகலில் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் நிலவும் கடும் வெப்பத்தினால் வீடுகளில் குளிரூட்டும் கருவிகளை பயன்படுத்தியமையின் பின்னர் மின்பாவனை அதிகரித்த நிலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மின் தடையினால் போஸ்னியா மற்றும் குரோஷியாவில் போக்குவரத்து சமிக்ஞைகள் தடைப்பட்டு, சரஜேவோ, ஸ்பிலிட் மற்றும் பிற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வேளையில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டதாகவும், ஆனால் நான்கு நாடுகளின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின்சக்தி அமைப்புகளில் எங்கே பிரச்சினை ஏற்பட்டது என்பதை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும் மின்சாரம் வழங்குனர்கள் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 13:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதோடு, மொண்டினீக்ரோவின் தலைநகரான போட்கோரிகாவில் நீர் விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த குரோசியா நாட்டில் உணவகங்கள், கழியாட்ட விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மின்சார தடையால் மூடப்பட்டதால் விடுமுறைக்கு சென்றவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள்.
அப்பகுதி முழுவதும் பகல் வேளையில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக மின் நுகர்வு திடீரென அதிகரித்தது மின் தடைக்கு காரணம் என மொண்டினீக்ரோவின் எரிசக்தி அமைச்சர் சாசா முஜோவிக் தெரிவித்துள்ளார்.
அல்பேனியாவில், அரை மணி நேரத்திற்குள் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டது, ஆனால் மின்சார பயன்பாடு அதிகமாக இருப்பதால், மேலும் மின்தடை ஏற்படும் அபாயம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM