சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும்!

22 Jun, 2024 | 08:36 AM
image

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை,  ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60- 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான அத்துடன் திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55  கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில்  இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்களில்  கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 - 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

2025-02-14 15:11:39
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு...

2025-02-14 15:44:42
news-image

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா...

2025-02-14 15:01:51
news-image

வடக்கு, கிழக்கில் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் மன்னார்...

2025-02-14 15:10:59
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ;...

2025-02-14 15:16:02
news-image

மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க...

2025-02-14 15:13:32
news-image

கோனகங்கார பகுதியில் கஞ்சாவுடன் மூன்று சந்தேக...

2025-02-14 14:51:52
news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - மூன்று...

2025-02-14 15:10:26