19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவரானார் ஷாருஜன்

Published By: Vishnu

22 Jun, 2024 | 12:37 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார்.

தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார்.

இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். 3 அரைச் சதங்களுடன் 196 ஓட்டங்களைப் பெற்ற அவர், 5 விக்கெட்களையம் கைப்பற்றியிருந்தார்.

அணியில் இடம்பெறுவோரில் புலிந்து பெரேரா, விஹாஸ் தெவ்மிக்க ஆகியோரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மற்றைய இரண்டு வீரர்களாவர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு முன்னாள் தேசிய வீரரும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

துடுப்பாட்டப் பயிற்றுநராக தம்மிக்க சுதர்ஷனவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக ஒமேஷ் விஜேசிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுப் பயண தெரிவாளராக டில்ருவன் பெரேரா இங்கிலாந்து செல்லவுள்ளார்.

போட்டி விபரங்கள்

இங்கிலாந்துக்கு சனிக்கிழமை (22) காலை புறப்பட்டுச் செல்லவுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி அங்கு முதலாவதாக 50 ஓவர் பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடும்.

பயிற்சிப் போட்டி  லோபரோ பல்கலைக்கழக மைதானத்தில்  ஜூன் 25ஆம் திகதி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து செல்ஸ்போர்ட், க்ளவ்ட் கவுன்டி மைதானத்தில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நடைபெறும்.

தொடர்ந்து ஹோவ் செஞ்சரி கவுன்டி மைதானத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜூலை 1ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறும்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது நான்கு நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வோர்ம்ஸ்லியில் ஜூலை 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரையும் இரண்டாவது போட்டி செல்டன்ஹாமில் ஜூலை 16ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரையும் நடைபெறும்.  

19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்

தினுர களுபஹன (தலைவர் - காலி மஹிந்த), சண்முகநாதன் ஷாருஜன் (உதவித் தலைவர் - கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர்), சதேவ் சமரசிங்க (நாலந்த), புலிந்து பெரேரா ஷேஷான் மாரசிங்க (இருவரும் கண்டி தர்மராஜ), ஹிரான் ஜயசுந்தர (மருதானை புனித சூசையப்பர்), தினிரு அபேவிக்ரமசிங்க (மாத்தறை புனித சர்வேஷஸ்), மஹித் பெரேரா, நேதன் கல்தேரா (இருவரும் கல்கிஸ்ஸை பரி. தோமா), கயன வீரசிங்க (குருநாகல் மலியதேவ), திசர ஏக்கநாயக்க (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார்), யூரி கொத்திகொட (காலி றிச்மண்ட்), மஞ்சுள சன்துக்க (மொறட்டுவை புனித செபஸ்தியார்), விஹாஸ் தெவ்மிக்க (கொழும்பு தேர்ஸ்டன்), துமிந்து செவ்மின, ப்ரவீன் மனீஷ (இருவரும் கொழும்பு லும்பிணி), ஹிவின் கெனுல (களுத்துறை திருச்சிலுவை), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48