(நெவில் அன்தனி)
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண 9ஆவது அத்தியாயத்தின் இணை வரவேற்பு நாடுகளான மேற்கிந்தியத் தீவுகளும் ஐக்கிய அமெரிக்காவும் மோதும் குழு 2க்கான சுப்பர் 8 போட்டி பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்ரங்கில் நாளைக் காலை நடைபெறவுள்ளது.
தத்தமது முதலாவது சுப்பர் 8 போட்டிகளில் முறையே இங்கிலாந்திடமும் தென் ஆபிரிக்காவிடமும் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகளும் ஐக்கிய அமெரிக்காவும் முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் பெறுவதற்கு கடுமமையாக முயற்சிக்கவுள்ளன.
சி குழுவில் சகல போட்டிகளிலும் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் சுப்பர் 8 சுற்று தோல்வியுடன் ஆரம்பமானது. இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஐக்கிய அமெரிக்கா, தென் ஆபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளையும் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வென்றால் மாத்திரமே அரை இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு உருவாகும்.
அதேவேளை, இந்தியாவும் இடம்பெற்ற ஏ குழுவில் பாகிஸ்தானை முற்றிலும் எதிர்பாராத விதமாக வெற்றிகொண்ட பின்னர் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாத ஐக்கிய அமெரிக்கா நாளைய போட்டியில் சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. என்றாலும் ஐக்கிய அமெரிக்கா அதிர்ச்சியை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த இரண்டு அணிகளில் மேற்கிந்தியத் தீவுகள் சற்று பலம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
எவ்வாறாயினும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளான ப்றெண்டன் கிங் நாளைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரவில்லை.
ஆனால், 7ஆம் இலக்கம் வரை துடுப்பாட்ட வரிசை நீணடுக்கொண்டு போகிறது.
ஐக்கிய அமெரிக்க அணியில் 6ஆம் இலக்கம் வரை மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இருக்கின்றனர். தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
எவ்வாறாயினும் இந்த இரண்டு அணிகளும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண (50 ஓவர்) தகுதிகாண் சுற்றில் மோதிக்கொண்டபோது 39 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றிருந்தது. அதுவே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட ஒரே ஒரு சந்தர்ப்பமாகும்.
அணிகள்
மேற்கிந்தியத் தீவுகள்: ஷிம்ரன் ஹெட்மயர், ஜோன்சன் சார்ள்ஸ், நிக்கலஸ் பூரன், ரோவ்மன் பவல் (தலைவர்), ரொஸ்டன் சேஸ், அண்ட்றே ரசல், ஷேர்ஃபேன் ரதஃபர்ட், ரொமாரியா ஷெப்பர்ட், அக்கீல் ஹொசெய்ன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி.
ஐக்கிய அமெரிக்கா: ஸ்டீவ் டெய்லர், அண்ட்றீஸ் கௌஸ், நிட்டிஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ் (தலைவர்), கோரி அண்டசன், ஷயன் ஜஹங்கிர், ஹாமீத் சிங், நொஸ்துஷ் கெஞ்சிங்கே, ஷட்லி வன் ஷோல்வைக், அலி கான், சௌராப் நேத்ரவோல்கர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM