'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்  

21 Jun, 2024 | 05:28 PM
image

'ஈழத்து திருச்செந்தூர்' என போற்றப்படும் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு கும்பாபிஷேக பெருவிழா வியாழக்கிழமை (20) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடந்த 16ஆம் திகதி கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாயின. இந்த கும்பாபிஷேக கிரியைகள் தமிழ் மொழியில் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் முதல் முதலாக தமிழில் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான 21 கலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தெய்வ நெறி தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி தலைமையில் பல இலங்கை, இந்தியாவின்  ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து இந்த கிரியைகளை நடாத்தினார்கள்.

புதன்கிழமை (19) அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

இன்றைய தினம் காலை விசேட யாக பூஜைகள் நடைபெற்றதுடன், கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏ.கே.எஸ். ஆடையகம் கிரிக்கெட் வீரர் சனத்...

2024-07-13 12:57:19
news-image

தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின்...

2024-07-13 13:42:12
news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24
news-image

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய...

2024-07-09 17:55:16
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா

2024-07-09 11:22:11
news-image

முன்னாள் இராணுவத்தளபதி ஸ்ரீநாத் வீரசூரிய எழுதிய...

2024-07-08 17:39:28
news-image

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC)...

2024-07-08 17:57:42
news-image

சிறப்பான அரங்கேற்றம் மகிழ்வு தந்தது

2024-07-06 23:03:25