ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சபர் கோஹார் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் செஹான் ஜயசூரிய 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 23.5 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் சமரவிக்ரம 45 ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக செஹான் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.