வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது - சாகல

Published By: Digital Desk 7

21 Jun, 2024 | 09:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மிக குறுகிய காலத்தில் மீளக்கூடிய நிலை இருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி சிறுவர் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை தன்கிழமை (19) பார்வையிட்ட பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் நாங்கள் வீழ்ச்சியடைந்தோம். அதனால் எமது நாடு வங்குராேத்து நிலைக்கு தள்ளப்பட்டது. என்றாலும் இந்த வங்குராேத்து நிலை மிக குறுகிய காலத்தில் நிறைவுக்கு வரும்.  வங்குராேத்து நிலை நிறைவுக்கு வந்தால் எமது பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

நாங்கள் தற்போது ஸ்திர நிலையை அடைந்திருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்துவந்த எரிவாயு,சமையல் எரிவாயுக்கான வரிசை இல்லை. மருந்து தட்டுப்பாடு இல்லை. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தேவையான அளவு நாட்டில் தற்போது இருக்கிறது. என்றாலும் இன்னும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. 

குறிப்பாக மக்களின் வாழ்வாதார பிரச்சினையே தற்போது பிரதானமாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பொருளாதாரத்தை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு பிரதானமாக  செய்யவேண்டியது வங்குராேத்து நிலையில் இருந்து மீள்வதாகும். அதற்கு நாங்கள் கடன் பெற்றவர்களுடன் கலந்துரையாடி எமது கடன் மறுசீரமைப்புக்கு அவர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். மிக குறுகிய காலத்தில் இதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவர நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுத்துக்கொண்டே மக்களின் வாழ்க்கைச்செலவு போராட்டத்தை தீர்த்துக்கொண்டு, மக்களுக்கு சேவைகளை வழங்குங்குவதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12