மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது.

Published By: Digital Desk 7

21 Jun, 2024 | 04:25 PM
image

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்று வெள்ளிக்கிழமை (21) அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்த துடன்,சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையி, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சோதனை சாவடியை அகற்றி தருமாறு நேரடி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில்  ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளது டன்  சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அப்பகுதியில் ராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் ராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52