(நெவில் அன்தனி)
மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது நடைபெற்றுவரும் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றின் 5ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை தென் ஆபிரிக்கா எதிர்த்தாடவுள்ளது.
குழு 2க்கான இந்தப் போட்டி சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (21) இரவு (இலங்கை நேரப்படி) 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தத்தமது ஆரம்பப் போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இன்றைய போட்டி கிட்டத்தட்ட நொக் அவுட்டுக்கு சமமானதாக இருக்கப் போகிறது.
அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொள்வதற்கு இரண்டு அணிகளுக்கும் இப்போட்டி முடிவு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் என்ன விலை கொடுத்தேனும் வெற்றி பெற முயற்சிக்கும்.
இங்கிலாந்து வெற்றி பெற்றால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் அதன் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிடும். ஏனெனில், தென் ஆபிரிக்கா தனது கடைசிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கவுள்ளது.
இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் 25 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு அணிகளும் தலா 12 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.
இதேவேளை ரி20 உலகக் கிண்ணத்தில் 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.
எவ்வாறாயினும், இம்முறை இரண்டு அணிகளிலும் இடம்பெறும் வீரர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதால் இந்தப் போட்டி கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சுப்பர் 8 போட்டியில் ஆட்டம் இழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்ற பில் சோல்ட் 16ஆவது ஓவரில் குவித்த 30 ஓட்டங்களின் (4, 6, 4, 6, 6, 4) உதவியுடன் 8 விக்கெட்களால் இங்கிலாந்து இலகுவாக வெற்றி பெற்றது. ஜொனி பெயாஸ்டோவும் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆனால், ஐக்கிய அமெரிக்காவுடனான சுப்பர் 8 போட்டியில் சவாலுக்கு மத்தியிலேயே 18 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது. அப்போட்டியில் குவின்டன் டி கொக் (74), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (46) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
அணிகள்
இங்கிலாந்து: பில் சோல்ட், ஜொஸ் பட்லர் (தலைவர்), மொயீன் அலி, ஜொனி பெயாஸ்டோவ், ஹெரி ப்றூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ராஷித், மார்க் வூட் அல்லது கிறிஸ் ஜோர்டன், ரீஸ் டொப்லே.
தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மாக்ராம், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், மார்க்கொ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி அல்லது ஒட்நீல் பாட்மன், அன்றிச் நோக்யா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM