யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர் ஒருவர்  அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த நபர்  பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுடன் வந்த மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார்.

இதேவேளை பொதுமக்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை, அவரது மனைவி தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது. 

தற்போது தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.