வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா கடும் கரிசனை

21 Jun, 2024 | 03:24 PM
image

வடகொரியாவிற்கு ரஸ்யா ஆயுதங்களை வழங்கலாம் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளமை குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புட்டின் வெளியிட்டுள்ள இந்த கருத்து ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிற்கான ரஸ்ய ஆயுதங்கள் என்பது கொரிய தீபகற்பத்தை பலவீனப்படுத்தும் ஸ்திரமிழக்கச்செய்யும் என  குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் வழங்கும் ஆயுதங்களை பொறுத்து அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை மீறும் நடவடிக்கையாக அமையும் ரஸ்யாவே இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஸ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலானது என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27
news-image

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான...

2024-07-12 12:28:03
news-image

ரஷ்யாவுக்கு உளவு தகவல் வழங்கிய அவுஸ்திரேலிய...

2024-07-12 12:10:55
news-image

உக்ரைன் ஜனாதிபதியை புட்டின் என அழைத்த...

2024-07-12 11:33:04
news-image

நேபாளத்தில் நிலச்சரிவு ; 60 பயணிகளுடன்...

2024-07-12 11:08:53
news-image

இலங்கையிலிருந்து தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க...

2024-07-12 10:40:09
news-image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள்...

2024-07-11 18:06:40
news-image

பைடன் போட்டியிட்டால் நவம்பர் 20இல் நாங்கள்...

2024-07-11 12:31:31
news-image

பாகிஸ்­தானில் வாராந்த சந்­தையில் பாரிய தீ;...

2024-07-11 12:26:23
news-image

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது:...

2024-07-11 12:19:51
news-image

அவுஸ்திரேலியாவில் தீயில் சிக்கிய குழந்தைகள் காப்பாற்றப்படுவதை...

2024-07-11 15:33:22
news-image

குறுக்குவில்லை பயன்படுத்தி பிபிசி ஊடகவியலாளரின் மனைவி,...

2024-07-11 12:19:15