பாதுக்கையில் முச்சக்கரவண்டி மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு

21 Jun, 2024 | 12:54 PM
image

பாதுக்கை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீபே - இங்கிரிய வீதியில் அங்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (20) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மீபேவிலிருந்து இங்கிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வயோதிபப் பெண் காயமடைந்துள்ள நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்கை, அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் ஹோமாகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07