இரு பெண் கடற்படையினருக்கு ஆபாச காணொளிகளை அனுப்பிய முன்னாள் கடற்படை அதிகாரி கைது

21 Jun, 2024 | 10:37 AM
image

இரு பெண் கடற்படையினருக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச காணொளிகளை அனுப்பியதாகக் கூறப்படும் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத நபரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு ஆபாச காணொளிகளை அனுப்பி தன்னைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாகப் பெண் கடற்படையினர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு ஆபாச காணொளிகளை அனுப்பி தன்னைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக மற்றுமொரு பெண் கடற்படையினரிடமிருந்தும் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த இரண்டு முறைப்பாடுகளுடனும் தொடர்புடையவர் ஒரே நபர் என தெரியவந்ததையடுத்து, சந்தேக நபர் பலப்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான முன்னாள் கடற்படை அதிகாரி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32