பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது !

20 Jun, 2024 | 07:45 PM
image

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 20  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் களனி மற்றும் ஹெந்தல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் பனாகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் மீட்டியாகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,751 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07