(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழி மூல பாடசாலைகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.
இவ்வாறான நிலைமையில் எப்படி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என சுயாதீன எதிரணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மகளிர் வலுப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
யுனெஸ்கோ பிரகடனத்தில் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.
கடந்த 5 வருடங்களை எடுத்துக்கொண்டால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்போது 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னரும் கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சிங்கள வெட்டுப்புள்ளிகள் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் இல்லை என்பதனையே காட்டுகிறது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களின் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... யுத்த காலத்திலும் கூட கொழும்பு ரோயல் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் வகுப்புகள் இடம்பெற்றன.
ஆனால், வடக்கு, கிழக்கில் சிங்கள மொழிமூலம் வகுப்புகள் ஏதும் இல்லை. மட்டக்களப்பில் எத்தனையோ சிங்கள கிராமங்கள் உள்ளன. எத்தனையோ சிங்கள பாடசாலைகள் பிரபுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இல்லாது இருக்கின்றன. இப்படி இருக்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM